மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் பட்டணம்காத்தான் சேதுபதிநகர் வடக்கு 5-வது தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் அபினாஷ் (வயது22). இவர் கடந்த சில மாதங்களுக்குமுன் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி பயன்படுத்தி வந்து உள்ளார். இந்தநிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி தனது வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு இரவில் தூங்க சென்றுவிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவரின் தாய் ஜெயராணி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்தபோது ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளம் பொன்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துராமன் மகன் சபாபதி (19) என்பவர் திருடியது தெரிந்தது. அவர் தற்போது கோவையில் வேலைபார்த்து வருவது தெரிந்து தனிப்படையினர் அங்கு சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வீட்டில் வாகனத்தை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story