தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர் 47 பேர் கைது


தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்  47 பேர் கைது
x

தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர் 47 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் தொடர்ந்து ஏறி வரும் விலைவாசி உயர்வையும், வேலை வாய்ப்பின்மையையும் கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், மாநில செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன், கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, பரமக்குடி நகர் தலைவர் அகமது கபீர், கவுன்சிலர் மணிகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்ட் கணேசன், மாநில நெசவாளர் அணி கோதண்டராமன், மாவட்ட சிறுபான்மை துறை நிர்வாகி வாணி செய்யது இப்ராஹிம், கலைப்பிரிவு நிர்வாகி முனியசாமி, வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், மனோகரன், சேது பாண்டியன், கார்மேகம், மாவட்ட நிர்வாகிகள் நிஜாம் அலிகான், காமராஜ், ஜோதி பாலன், மோதிலால் நேரு, ராஜீவ் காந்தி, அன்சாரிசேட் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story