போக்சோ சட்டத்தில் பாதிரியார் கைது
போக்சோ சட்டத்தில் பாதிரியார் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்
பனைக்குளம்,
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஆண்டிச்சியூரணி பகுதியை சேர்ந்தவர் ஜான் ராபர்ட்(வயது 46). இவர் கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இவர் தேவாலயங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் தவறாக நடந்ததாக சம்பந்தப்பட்டவர்கள் ராமநாதபுரம் குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் குழந்தைகள் நல அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களிடம் ரகசியமாக விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைக்க பெற்றதை தொடர்ந்து மண்டபம் போலீசார், ஜான் ராபர்ட் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story