கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது


கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
x

கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி உத்தரவின்பேரில் கஞ்சா ஒழிப்பு தனிப்படை போலீசார் கடந்த ஒரு மாதமாக கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மட்டும் செஞ்சை பகுதியில் கஞ்சா மொத்த வியாபாரம் செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நள்ளிரவு முதல் அப்பகுதியில் பதுங்கியிருந்த போலீசார் அதிகாலை நேரத்தில் அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. கஞ்சா விற்பனை செய்த பானுமதி (வயது 50) என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரது கணவர் சுந்தர் தப்பி ஓடி விட்டார் . அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதே போல உ.சிறுவயல் அருகே கஞ்சா விற்றதாக பேயன்பட்டியை சேர்ந்த விஷ்ணு (20), என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ஜீவா (22) ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து தலா 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கஞ்சா விற்றதாக 2 பெண்கள் உள்பட 18 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.Related Tags :
Next Story