புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர் கைது
புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர் கைது
ஈரோடு
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 42). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பர் ஒருவரும் சேர்ந்து அந்தியூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதுபற்றி தன்னுடைய பெற்றோரிடம் அந்த இளம்பெண் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து இளம்பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தர்மலிங்கத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தர்மலிங்கம் கொடுத்த தகவலின் பேரில் அவருடைய நண்பரான சரண்குமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story