பஸ் மீது கல்வீச்சு;வாலிபர் கைது
பஸ் மீது கல்வீச்சு தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு ரெகுநாதபுரம் பகுதிக்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் ராமநாதபுரம் குமரையா கோவில் பஸ் நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்தபோது பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது மர்ம நபர் கல் வீசி எறிந்து விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து பஸ் கண்டக்டர் ஆறுமுகம் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்த ராமு என்பவரின் மகன் அஜித்மணி (வயது 25) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story