ஆத்தூர் அருகே விபத்தில் 6 பேர் பலி: ஆம்னி பஸ் டிரைவர் கைது
ஆத்தூர் அருகே விபத்தில் 6 பேர் பலியானதை அடுத்து விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே ஓட்டம்பாறை பைபாஸ் சாலையில் நேற்று முன்தினம் ஆம்னி பஸ்சும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் பலியானார்கள். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் டிரைவர் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த முத்துசாமி (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்து ஆத்தூர் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே விபத்து நடந்த இடத்தை சென்னை இந்தியன் இன்பர்மேஷன் டெக்னாலஜி சேர்ந்த என்ஜினீர் சந்தோஷ் தலைமையில் 4 பேர் கொண்ட குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது. மேலும் விபத்துக்கள் நடக்காமல் தடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story