பெண்ணுக்கு பாலியல் தொல்லை; நகை அடகுக்கடை அதிபர் கைது


பெண்ணுக்கு பாலியல் தொல்லை; நகை அடகுக்கடை அதிபர் கைது
x

பெண்ணுக்கு பாலியல் தொல்லை; நகை அடகுக்கடை அதிபர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 52), இவர் பாலக்கோடு பஜாரில் நகை அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். இவரிடம் சுப்ரமணி தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாகவும், மறுத்தால் வேலையை விட்டு நிறுத்தி விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் நகைகளை திருடி சென்று விட்டாய் என கூறி போலீசில் புகார் தந்துவிடுவேன் எனவும் மிரட்டி தினமும் செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் மன உளைச்சல் அடைந்த அந்த பெண் கடந்த வாரம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அந்த பெண்ணை குடும்பத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவலறிந்த பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து சுப்ரமணி மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, அவரை கைது செய்தார்.


Next Story