பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது


பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது
x

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

நயினார்கோவில் யூனியன் பந்தப்பனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வினித். இவர் தனது தாய் ஜெயச்சந்திராவுடன் பி.வலசை பேருந்து நிறுத்தம் அருகேமோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது பாண்டிகண்மாய் கிராமத்தை சேர்ந்த ஆதிநாராயணமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த அர்ச்சுனன் என்ற முல்லைவேந்தன் ஆகிய 2 பேரும் ஜெயச்சந்திரா கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். முடியாததால் 2 பேரும் தப்பி சென்றனர். அப்போது பரமக்குடி ஆற்றுப் பாலம் அருகே பொதுமக்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story