தாத்தாவை கொலை செய்த பேரன் கைது
தாத்தாவை கொலை செய்த பேரன் கைது செய்யப்பட்டான்.
உச்சிப்புளி அருகே சின்னுடையாா்வலசை பகுதியைச் சோ்ந்தவர் கூலித் தொழிலாளி கோவிந்தராஜ் (வயது79). இவருக்கு 4 மகன்கள் உள்ளனா். திருமணமாகி அனைவரும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். கோவிந்தராஜ் தனது மனைவி லட்சுமியுடன் தனியாக வசித்து வந்தாா். கோவிந்தராஜின் 3-வது மகன் விஜயகுமாரின் மகன் சங்கா்முரளி (வயது19) கோவிந்தராஜ் வீட்டில் ரூ.500 திருடியுள்ளாா். இதைப் பாா்த்த அவர் சங்கர்முரளியை கண்டித்துள்ளாா். இதில் ஆத்திரம் அடைந்த சங்கா்முரளி தனது தாத்தாவை தாக்கி கீழே தள்ளி கழுத்தை நெரித்துள்ளாா். அதைத் தடுத்த பாட்டி லட்சுமியையும் அவா் தாக்கிவிட்டு தப்பிச் சென்று விட்டாா். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தாா். இதையடுத்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கா்முரளியை கைது செய்தனா்.