ஈரோட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த 2 பேர் கைது


ஈரோட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த 2 பேர் கைது
x

ஈரோட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நைஜீரியா நாட்டினர்

ஈரோடு அருகே பவளத்தாம்பாளையம் பகுதியில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் அங்கு தங்கி இருந்தார்கள்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் பெயர் மைக்கேல் (வயது 39), ஓகிகி (36) ஆகியோர் என்பதும், நைஜீரியா நாடு மேற்கு எல்.ஜி.ஏ. பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், ஈரோட்டில் கடந்த 6 ஆண்டுகளாக தங்கியிருந்த அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பனியன்களை வாங்கி வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்து உள்ளது.

2 பேர் கைது

அவர்கள் இந்தியாவில் தங்கியிருப்பதற்கான ஆவணங்களை போலீசார் கைப்பற்றி பார்வையிட்டனர். அப்போது பாஸ்போர்ட் அவர்களிடம் இல்லை என்பதும், விசா காலாவதியாகி இருப்பதும் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக மைக்கேல், ஓகிகி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story