குருபரப்பள்ளி அருகே லாரியில் மண் கடத்திய 2 பேர் கைது


குருபரப்பள்ளி அருகே லாரியில் மண் கடத்திய 2 பேர் கைது
x
கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கொண்டப்பநாயனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக ஒரு டிப்பர் லாரி வந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3 யூனிட் மண் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் கொண்டப்பநாயனப்பள்ளியில் இருந்து குருபரப்பள்ளிக்கு அந்த மண் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து மண் கடத்தியதாக டிப்பர் லாரி டிரைவர் ஜிங்கலூர் சர்தார்ஷா (வயது 36) மற்றும் பாதுஷா (54) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரி, ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story