ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க சித்தியை தாக்கி 21 பவுன் நகையை பறித்த வாலிபர் கைது; சித்தோடு அருகே பரபரப்பு


ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க சித்தியை தாக்கி 21 பவுன் நகையை பறித்த வாலிபர் கைது; சித்தோடு அருகே பரபரப்பு
x

சித்தோடு அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க சித்தியை தாக்கி 21 பவுன் நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

பவானி

சித்தோடு அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க சித்தியை தாக்கி 21 பவுன் நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலிபர்

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள மாமரத்துபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 50). இவர் அந்தப் பகுதியில் கட்டிட காண்டிராக்டர். அவருடைய மனைவி வசந்தி (39).

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், மட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாது என்பவரின் மகன் பிரகாஷ் (27). இவர் வெங்கடேஷ் கட்டிடம் கட்டி விற்பனை செய்யும் வீடுகளுக்கு எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். பிரகாஷ் வசந்தியின் அக்காள் மகன் ஆவார்.

நகை பறிப்பு

பிரகாஷ் ஆன்லைன் சூதாட்டில் ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கடனை அடைக்க பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை திருப்பி கட்ட முடியவில்லை.

இந்த நிலையில் பிரகாஷ் கடந்த 9-ந்தேதி மாலை வசந்தி வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அவரிடம் கடனை அடைக்க பணம் கேட்டுள்ளார். இதற்கு வசந்தி தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ் சித்தி வசந்தியை இரும்பு கம்பியால் தலை, மார்பு ஆகிய பகுதியில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிசங்கிலி பறித்தார். மேலும் திறந்திருந்த பீரோவில் இருந்த 2 ஆரெம்கள் தலா 5 பவுன், தோடு, காது மாட்டல் 2 பவுன், மோதிரம், தங்க காசு 2 பவுன் என 14 பவுன் நகையை திருடிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார்.

கைது

பின்னர் அக்கம்பக்கத்தினர் வசந்தியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து வசந்தி சித்தோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா தலைமையிலான போலீசார் பிரகாசை தேடி வந்தனர். இந்த நிலையில் பிரகாஷ் திருநெல்வேலி பஸ் நிலையத்தில் வெளியூர் செல்ல நிற்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மொத்தம் 21 பவுன் நகையில் 19 பவுன் நகை மீட்கப்பட்டது


Related Tags :
Next Story