மாற்றுத்திறனாளியை தாக்கியவர் கைது
மாற்றுத்திறனாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கையை அடுத்த ராகினிபட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 43) மாற்றுத்திறனாளி. இவர் சிவகங்கை நகர் நேருபஜாரில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் ரமீஸ் (55). இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு சூப்பர் மார்க்கெட் ஆரம்பிப்பதாக திட்டமிட்டனர். இதற்காக வெள்ளைச்சாமி ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடை ஆரம்பிக்காமல் ஏமாற்றியதாக ரமீஸ் மீது சிவகங்கையில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராகினிபட்டியில் உள்ள வெள்ளைச்சாமிக்கு சொந்தமான இடத்தில் ரமீஸ் உள்பட சிலர் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கி அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினார்களாம். இந்த சம்பவம் குறித்து வெள்ளைச்சாமி சிவகங்கையில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் மனு கொடுத்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் சிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து ரமீசை கைது செய்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகிறார்.