நிலத்தகராறில் பள்ளி மாணவி மீது தாக்குதல் 2 பேர் கைது


நிலத்தகராறில் பள்ளி மாணவி மீது தாக்குதல்  2 பேர் கைது
x

நிலத்தகராறில் பள்ளி மாணவி மீது தாக்குதல் 2 பேர் கைது

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள பின்டேகானப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் பவித்ரா (வயது 19). சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர்களது உறவினர் முனியப்பா (50). இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பவித்ரா இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் முனியப்பா, பாலமுரளி (20), லகுமம்மா (42) ஆகிய 3 பேர் மீது சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் பாலமுரளி கைது செய்யப்பட்டார். அதேபோல லகுமம்மா ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னையும், கணவர் முனியப்பாவையும் தாக்கி விட்டதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் வெங்கடேஷ் (35), ஜெய்சங்கர் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டார்.


Next Story