சித்தா, ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை அளித்தவர் கைது
சித்தா, ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை அளித்தவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை
தேவகோட்டை,
தேவகோட்டை சிதம்பரநாதபுரம் பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருபவர் தாரக ராமன் (வயது 42). இவர் அக்குபஞ்சர் சிகிச்சை படித்துவிட்டு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சிவகங்கை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் மற்றும் தேவகோட்டை மருத்துவ அதிகாரி டாக்டர் செங்கதிர், அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் பாரி ஆகியோர் அந்த கிளினிக்கில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தாரக ராமன் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தேவகோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து தாரக ராமனை கைது செய்தார்.
Related Tags :
Next Story