திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 26). இவர், கடந்த மாதம் தாதகாப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கர் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி தங்க மோதிரம் மற்றும் ரூ.12,500-ஐ பறித்து சென்றார்.

இது குறித்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே அவர் மீது வழிப்பறி, ஆடுகளை திருடியதாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கிச்சிப்பாளையம் எருமாபாளையம் மெயின்ரோடு முருககவுண்டர் காடு பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் (43). இவர், கடந்த மாதம் 4-ந் தேதி அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த அருண்குமார் என்பவரை மிரட்டி தங்க சங்கிலி மற்றும் பணத்தை பறித்து சென்றார். இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்ட்டினை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே வழிப்பறியில் ஈடுபட்டதாக அவர் மீது செவ்வாய்பேட்டை மற்றும் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், தர்மராஜ் மற்றும் மார்ட்டின் ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு அன்னதானப்பட்டி போலீசார், கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில், அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட கமிஷனர் நஜ்முல் ஹோடா நேற்று உத்தரவிட்டார்.


Next Story