கிருஷ்ணகிரி வழியாக சென்னை சென்ற அரசு பஸ்சில் ரூ.60 ஆயிரம் குட்கா கடத்தல் கணவன், மனைவி கைது
கிருஷ்ணகிரி வழியாக சென்னை சென்ற அரசு பஸ்சில் ரூ.60 ஆயிரம் குட்கா கடத்தல் கணவன், மனைவி கைது
கிருஷ்ணகிரியில் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதனை அலுவலராக பணியாற்றி வருபவர் அரிகுமார் (வயது 57). இவர் நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் சோதனை செய்தார்.
அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை அலுவலர் அரிகுமார் நிறுத்தி சோதனை செய்தார். அதில் ஒரு ஆணும், பெண்ணும் கையில் பையுடன் இருந்தனர். அவர்களை பார்த்து சந்தேகம் அடைந்த அரிகுமார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தார்.
அந்த பையில் 80 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், குட்கா ஆகியவை இருந்தன. இதுகுறித்து அரிகுமார் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா கடத்தியதாக சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சக்குபார் அலி (42), அவருடைய மனைவி பாத்திமா (36) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.