செல்போன் பறித்த 2 பேர் கைது
செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலூர்,
மேலூர் அருகே மேலவளவை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மேலூரில் குமார்நகர் அருகே உள்ள கடையில் நின்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் பிரபாகாரனிடம் செல்போன் பேசிவிட்டு தருவதாக வாங்கியுள்ளனர். பிரபாகரன் சற்று திரும்பிய நிலையில் அந்த வாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதனை பார்த்த பிரபாகரன் சத்தம் இடவே அங்கிருந்த இளைஞர்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் 2 பேரையும் மேலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் நத்தம் செட்டியார்குளத்தை சேர்ந்த செல்வபிரகாஷ் (வயது20) மற்றும் நத்தம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அஜய்குமார் (22) என்பதும், இவர்கள் பல இடங்களில் இதுபோன்று செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.