தேன்கனிக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனத்தில் திருடிய 2 பேர் கைது


தேன்கனிக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனத்தில் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை ராஜாஜி சாலையில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் மேலாளராக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த அரவிந்த் (வயது 28) என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று நிதி நிறுவனத்துக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த ரூ.35 ஆயிரம் மதிப்பிலான கையடக்க கணினியை திருடி சென்றனர். இதுகுறித்து மேலாளர் அரவிந்த் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் தேன்கனிக்கோட்டை யாரப் நகரை சேர்ந்த நவாஸ் (21), சையது அர்பாஸ் (19) ஆகியோர் நிதி நிறுவனத்தில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.


Next Story