காரை எரித்த வாலிபர் கைது


காரை எரித்த வாலிபர் கைது
x

காரை எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உதவி நிலைய டாக்டர் மனோஜ் குமாரின் கிளினிக் மற்றும் வீடு உள்ளது. பா.ஜனதா ஆதரவாளரான இவர் தனக்கு சொந்தமான 2 கார்களை கிளினிக் அருகில் நிறுத்திவிட்டு கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு தூங்க சென்று விட்டார். இந்த நேரம் பார்த்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 3 பேர் முகத்தை மூடியபடி வந்து டாக்டர் மனோஜ்குமாரின் காருக்கு தீ வைத்து சென்று விட்டனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே அனைவரும் வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் முதல் கட்டமாக ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியைச் சேர்ந்த சீனி முகம்மது என்பவரின் மகன் அப்துல் ஹக்கீம் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story