தகராறில் ஈடுபட்ட 9 பேர் கைது
தகராறில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர்
நன்னிலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது36). இவர் நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளைகுப்பம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று கடையில் இருந்த இவரிடம், தென்னஞ்சார் பகுதியை சேர்ந்த சூர்யா (24) என்பவர் கடனுக்கு பொருட்களை தரும்படி கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு நடந்தது. இதை அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடந்த தகராறில் இரு தரப்பினரும் காயம் அடைந்தனர். இது குறித்து இரு தரப்பினரும் நன்னிலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யா, சந்தோஷ் (21), விஜயராகவன் (38), ஸ்ரீராம் (26), ராபர்ட் (36), ராஜா (31), சுவாதி (23), ஜெயராமன் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகிய 9 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story