புகையிலை பொருட்கள் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை
திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது அ.வெள்ளக் கரை காலனி பகுதி. இங்கு பெட்டிக்கடை நடத்தி வருபவர் சவுந்திரபாண்டி (வயது55). இவர் பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் திருப்புவனம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் சென்ற போலீசார் பெட்டிக் கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப் பட்ட 85 புகையிலை பாக்கெட்டு களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின் றனர். இதேபோல் வன்னிக் கோட்டை கிராமத்தில் இருளாயி என்பவர் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் 40- ஐ பறிமுதல் செய்து வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story