புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்கள் கைது


புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்கள் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூரமங்கலம் அந்தோணியாபுரம் ஓடை பகுதியைச் சேர்ந்த செய்யது தாஜுதீன் (வயது 50) என்பவரது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது, இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததுடன், கடையில் இருந்த 11 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதே போல கன்னங்குறிச்சி பெருமாள் கோவில் வட்டம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் திருநாவுக்கரசு (வயது 42). இவரது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தினர். இதில் அந்த கடையில் 11 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்ததுடன் திருநாவுக்கரசுவை கைது விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story