தீபாவளி செலவுக்கு பணம் இல்லாததால் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 8 பேர் சிக்கினர்


தீபாவளி செலவுக்கு பணம் இல்லாததால் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 8 பேர் சிக்கினர்
x

தீபாவளி செலவுக்கு பணம் இல்லாததால் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 8 பேர் சிக்கினர்.

சேலம்

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி மேல்காடு பகுதியில் கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனியப்பன் கோவில் அருகே 8 பேர் கொண்ட கும்பல் வீச்சரிவாளுடன் இருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 8 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், ஆண்டிப்பட்டி சாலை மரத்து வட்டத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 24), சத்தியமூர்த்தி (23), அசோக் (28), சீனிவாசன் (25), சூர்யா (22), பிரகாஷ் (24), தினேஷ்குமார் (25), மெய்யழகன் (22) என்பதும், தீபாவளி செலவுக்கு பணம் இல்லாததால் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். மேலும் வீச்சரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story