சேலம் தாதகாப்பட்டி கேட்டில் இளநீர் வியாபாரியிடம் வழிப்பறி; 2 பேர் கைது
சேலம் தாதகாப்பட்டி கேட்டில் இளநீர் வியாபாரியிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்னதானப்பட்டி:
மல்லூர் தாசநாயக்கன்பட்டி அருகே உள்ள சின்னையபுரம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 53), இளநீர் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் தனது சைக்கிளில் வைத்து இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் குபேந்திரனை திடீரென வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி தாக்கி அவரிடமிருந்து ரூ.1000 பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து குபேந்திரன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இளநீர் வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்டது, களரம்பட்டி ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் (28), தாதகாப்பட்டி தாகூர் தெரு பகுதியை சேர்ந்த பாபு (46) ஆகியோர் என தெரியவந்ததை அடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.