பாலக்கோடு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே கஞ்சா விற்பனை செய்வதாக மாவட்ட போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட மது விலக்கு அமல்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பசவராஜ் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கோடு அருகே உள்ள பொப்பிடிச்சி அம்மன் கோவில் முன்பு வாலிபர் ஒருவர் பையுடன் நின்று கொண்டிருந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் போலிசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது அவர், சாமியார்நகர் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் வெங்கடேசன் (வயது 37) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.