தர்மபுரியில் பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
தர்மபுரி:
தர்மபுரி டவுன் பிடமனேரியை சேர்ந்தவர் வெங்கடேசன். தொழிலாளி. இவரது மனைவி முல்லைக்கரசி (வயது 38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முல்லைக்கரசிக்கும், அவரது தம்பி முரளிதரனுக்கும் (28) சொத்து பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி முரளிதரன், அவரது நண்பரான எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஆனந்தன் (38) ஆகிய 2 பேரும் முல்லைக்கரசி வீட்டில் தனியாக இருந்தபோது தகராறு செய்துள்ளனர். மேலும் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த முல்லைக்கரசி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக அவர் தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப்பதிவு செய்து முரளிதரன், ஆனந்தன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.