வனத்துறை தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை: யானை தந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர் கைது


வனத்துறை தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை:  யானை தந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வனத்துறை தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை: யானை தந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர் கைது

தர்மபுரி

யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க தர்மபுரி மாவட்ட வனத்துறையினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரி அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் 2 யானை தந்தங்கள் சிக்கின. அந்தக் காரில் வந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்த கும்பலை சேர்ந்தவர்கள் 25 கிலோ எடையுள்ள யானை தந்தங்களை கடத்தி இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைதொடர்ந்து தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவின்பேரில் தர்மபுரி வனச்சரக அலுவலர் அருண் பிரசாத் தலைமையிலான தனிப்படையினர் யானை தந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் யானை தந்த கடத்தலில் தொடர்புடைய கடலூர் மாவட்டம் பூண்டி பகுதியை சேர்ந்த பிரபு (வயது 37) என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


Next Story