அரூரில் 10 கிலோ கஞ்சா சிக்கியது: ஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது
தர்மபுரி
அரூர்:
அரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் அரூர் கச்சேரி மேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து ஓட முயன்றனர். அவர்களை போலீசார் துரத்தி பிடித்தனர். விசாரணையில் அந்த 2 பேரும் ஆந்திரா மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த ரங்கா ரெட்டி (வயது 52), மேடா பார்த்தசாரதி (65) என தெரிய வந்தது. அவர்கள் கையில் வைத்திருந்த பையை பறிமுதல் செய்து பரிசோதித்த போது அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது?, எங்கே கொண்டு செல்கிறார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story