வீட்டை திறந்து திருடியவர் கைது
வீட்டை திறந்து திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே ஒழுகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகுமாரி (வயது 35). இவரது கணவர் வடிவேல் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பத்தன்று ராஜகுமாரி வீட்டை பூட்டிவிட்டு சாவியை வெளியில் ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு வயலுக்கு சென்றபோது அங்கு வந்த ஒருவர் வீட்டு சாவியை எடுத்து உள்ளே புகுந்து 5 பவுன் நகைகள் மற்றும் 3 வெள்ளி கொலுசுகளை திருடி சென்றார். இதுகுறித்து நெற்குப்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் புதுக்கோட்டையை சேர்ந்த செல்வம் என்ற கொரக்கை செல்வம் (42) என்பவர் வீட்டை திறந்து திருடியது தெரியவந்தது. இவர் மீது சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் 45 திருட்டு வழக்குகள் உள்ளது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் நெற்குப்பை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார்,செல்வத்தை கைது செய்தனர்.