வேப்பனப்பள்ளி அருகே மதுக்கடை விற்பனையாளரை தாக்கியவர் கைது
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் அரசு டாஸ்மாக் கடையில் சுரேஷ்குமார் (வயது 43) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஜோடுகொத்தூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ், ராமராஜ், பாலாஜி ஆகியோர் வந்தனர். அவர்கள் விற்பனையாளர் சுரேஷ்குமாரிடம் கடனுக்கு மதுபாட்டில்களை கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் சுரேஷ்குமாரை மதுபாட்டிலால் தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முனிராஜை கைது செய்தனர். மேலும் ராமராஜ், பாலாஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.
Next Story