லாரியில் கிரானைட் கல் கடத்தல்; டிரைவர் கைது


லாரியில் கிரானைட் கல் கடத்தல்; டிரைவர் கைது
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

பர்கூர்:

கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி புவியியலாளர் பொன்னுசாமி மற்றும் அதிகாரிகள், குப்பம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காளிகோவில் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குப்பத்தில் இருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் கிரானைட் கல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த கல் ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் கந்திகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்தார். மேலும் கிரானைட் கல்லை கடத்தி வந்த தாசரிப்பள்ளியை சேர்ந்த டிரைவர் ஜெயசாம் ராஜ்குமாரை கைது செய்தார். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story