ரேஷன் கடைகளில் திருடிய 14 பேர் கைது


ரேஷன் கடைகளில் திருடிய 14 பேர் கைது
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் திருடிய 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

இளையான்குடி,

பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் திருடிய 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் கடையில் திருட்டு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மேலத்துறையூரில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ரேஷன் கடையில் இருந்து 110 மூடைகள் ரேஷன் அரிசியும் மற்ற உணவு பொருட்களும் திருடு போயிருந்தன. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக ரேஷன் கடை பொறுப்பாளர் முருகேசன் இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதேபோல ஆக்கவயல் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் 80 மூடை அரிசியும் மற்ற பொருட்களும் திருடு போயிருந்தன. இந்த சம்பவம் குறித்து சாலைக்கிராமம் போலீஸ் நிலையத்தில் ரேஷன் கடை பொறுப்பாளர் ராஜாத்தி புகார் செய்தார்.

காளையார் கோவில் மற்றும் மதகுப்பட்டி போலீஸ் நிலையங்களிலும் ரேஷன் கடைகளில் திருட்டு சம்பந்தமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், இளையான்குடி அருகே திருடியதாக காரைக்குடி பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த வடிவேல்(வயது 34), மேலூர் தாலுகா அலங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவா(22), பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரவீன் குமார் (23), சிவகங்கை சோழபுரம் பகுதியை சேர்ந்த குலசேகர பாண்டியன் மனைவி பிரியா (34), தமராக்கி பகுதி காரம்போடையை சேர்ந்த காஞ்சிவனம்(25), மேலநெட்டூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(42), காடரந்தகுடி கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரன்(41) ஆகியோரை இளையான்குடி போலீசார் கைது செய்தனர்.

கைது

சாலைக்கிராமம் அருகே திருடியதாக காரைக்குடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த கார்த்திகேயன்(24), பீகார் மாநிலத்தை சேர்ந்த சாகர் குமார்(25), மனோஜ் குமார்(24) ஆகியோரை சாலைக்கிராமம் போலீசார் கைது செய்தனர். மதகுப்பட்டி போலீஸ் நிலைய வழக்கு தொடர்பாக காரைக்குடி லட்சுமிபுரத்தை சேர்ந்த கதிர்வேல்(27), பீகார் மாநிலத்தை சேர்ந்த காரோன்(31), காளையார் கோவில் போலீஸ் நிலைய வழக்கு தொடர்பாக காடரந்தகுடி கிராமத்தை சேர்ந்த சிரஞ்சீவி(36), பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார்(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த ரேஷன்கடை திருட்டு சம்பந்தமாக மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 கார்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சுமார் 13 ஆயிரத்து 900 கிலோ ரேஷன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story