520 மதுபாட்டில்களுடன் 3 பேர் கைது
520 மதுபாட்டில்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ஏரகாடு பகுதியில் நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டு தனஞ்செயன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஏரகாடு பகுதியில் கருவேலம் செடிகளுக்கு இடையே 8 சாக்கு பைகளில் இருந்த 520 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக சாக்கு பைகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த ராமேசுவரத்தை சேர்ந்த ரவிக்குமார் (வயது48), நம்புராஜன் (வயது 55), கதிரவன் (52) ஆகிய 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire