வெள்ளி வியாபாரிகளிடம் கொள்ளையடித்த வழக்கு: மேலும் 4 பேர் கைது


வெள்ளி வியாபாரிகளிடம் கொள்ளையடித்த வழக்கு: மேலும் 4 பேர் கைது
x

வெள்ளி வியாபாரிகளிடம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

ஓமலூர்:

சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரோடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 45). அதே பகுதியைச் சேர்ந்த பாலசுந்தர் மகன் சாகர் (28), சிவதாபுரம் பனங்காடு பகுதியை சேர்ந்த விலாஸ் மகன் விக்ராந்த் (30). வெள்ளி வியாபாரியான இவர்கள் 3 பேரும் சேலத்தில் இருந்து கார் மூலம் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்று அங்கிருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 100 கிலோ வெள்ளியை வாங்கிக்கொண்டு சேலம் நோக்கி வந்தனர். கடந்த மாதம் 16-ந் தேதி இரவு ஓமலூர் அருகே உள்ள ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியில் அவர்களது கார் வந்து போது, அவர்களை வழிமறித்து ஒரு கும்பல் 100 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்றது. இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக ஏற்கனவே 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்சூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் விஜில் (34), நிதீஷ் என்கிற நிதின் (35), பாலக்காடு பகுதியை சேர்ந்த அசி என்கிற அசிஸ் (34), சிராஜுதீன் (32) ஆகிய 4 பேரை ஓமலூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story