இலங்கையில் இருந்து தப்பி வந்த நபர் தனுஷ்கோடியில் கைது
இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் வந்து தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தனுஷ்கோடி,
இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் வந்து தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தனுஷ்கோடிக்கு வந்தார்
ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி கடற்கரையில் சந்தேகப்படும் படியாக ஒருவர் சுற்றித்திரிவதாக மீனவர்கள், ராமேசுவரம் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் நின்றிருந்த அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். மேற்கு வங்காளத்தில் ஹூக்ளி பகுதியை சேர்ந்த உசைன் சேக்ரசியல் (வயது41) என்று தெரியவந்தது.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். விசாக்காலம் முடிந்துவிட்டதால் இ்ந்தியாவுக்கு தப்பி வர நினைத்துள்ளார்.
இதற்காக கொழும்பில் இருந்து மன்னார் சென்று அங்கிருந்து படகோட்டியை ஏற்பாடு செய்து அவர் மூலமாக, நேற்றுமுன்தினம் இரவு தனுஷ்கோடி கடற்கரைக்கு தப்பி வந்துள்ளார். அவரை இறக்கி விட்டுவி்ட்டு அந்த படகோட்டி மீண்டும் இலங்கையை நோக்கி சென்றுவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
கைது
கள்ளத்தனமாக வந்த உசைன் மீது கடலோர போலீசார், பாஸ்போர்ட் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.