1¼ டன் ரேஷன் அரிசியுடன் வாலிபர் கைது


1¼ டன் ரேஷன் அரிசியுடன் வாலிபர் கைது
x

திருப்பூரில் 1¼ டன் ரேஷன் அரிசியுடன் வாலிபரை குடிமைப்ெபாருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்


திருப்பூரில் 1¼ டன் ரேஷன் அரிசியுடன் வாலிபரை குடிமைப்ெபாருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி

திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் முருகம்பாளையம் அருகில் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். ரேஷன் அரிசி பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர்.

அப்போது அங்குள்ள காலியிடத்தில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அங்கு 1,275 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

கைது

இந்த ரேஷன் அரிசியை அப்பகுதியை சேர்ந்த அஜித்பாண்டி (வயது 23) என்பவர் முருகம்பாளையம் பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து பின்னர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அஜித்பாண்டியை கைது செய்து 1,275 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story