1200 கிலோ ரேஷன் அரிசியுடன் வாலிபர் கைது
1200 கிலோ ரேஷன் அரிசியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் எமனேசுவரம் பாலம்வழியாக ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையில் தலைமை காவலர்கள் குமாரசாமி, முத்துகிருஷ்ணன், தேவேந்திரன் உள்ளிட்ட போலீசார் அந்த பகுதியில் சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 30 மூடைகளில் தலா 40 கிலோ எடை உள்ள ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக முதுகுளத்தூர் அருகே உள்ள மதுரை காமராஜர் சாலை தூமட்டி ரங்கசாமி அய்யர் தெருவை சேர்ந்த முத்து மகன் ராமகிருஷ்ணன் (வயது31) என்பவரை கைதுசெய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி நுகர் பொருள் வாணிபக்கடங்கில் ஒப்படைக்கப்பட்டது.