கடல் அட்டை கடத்தியவர் மீது குண்டர் சட்டம்
கடல் அட்டை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம்,
பெரியபட்டணம் பகுதியை சேர்ந்த முகம்மது மீராசா என்பவரின் மகன் ஜாகிர் உசேன் (வயது 47). இவரை கடல் அட்டை கடத்திய வழக்கில் கீழக்கரை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் கைது செய்தனர்.இவர் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் ராமநாதபுரம் வனகாப்பாளர் பாகன் ஜெகதீஷ் சுதாகர் மேற்படி ஜாகிர்உசேனை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜாகிர் உசேனை ராமநாதபுரம் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் வனத்துறையினர் அடைத்தனர்.
Related Tags :
Next Story