மாரண்டஅள்ளி அருகே வீடுகளில் திருடிய 3 பேர் கைது


மாரண்டஅள்ளி அருகே வீடுகளில் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மராண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே உள்ள பூமரத்துபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ். கடந்த 1-ந் தேதி இவருடைய வீட்டில் ரூ.1 லட்சம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் திருடப்பட்டன. இதேபோல் பெல்லுஅள்ளி கிராமத்தை சேர்ந்த குப்பம்மாள் வீட்டில் 5 பவுன் நகை திருடப்பட்டது. இதுகுறித்த புகார்களின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் 2 வீடுகளில் திருடியதாக அமானிமல்லாபுரம் கீழ் வீதியை சேர்ந்த லாரி டிரைவர் சபரி (வயது 30), கட்டிட மேஸ்திரி அரவிந்த் (22), ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Next Story