தளியில் டிரைவர், கண்டக்டரை தாக்கியவர் கைது


தளியில் டிரைவர், கண்டக்டரை தாக்கியவர் கைது
x

தளியில் டிரைவர், கண்டக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே கரியனபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 52), தனியார் பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவர் கெலமங்கலத்தில் இருந்து, அன்னியாளத்திற்கு பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது பஸ்சில் பயணம் செய்த அன்னியாளத்தை சேர்ந்த மாதேஷ் (34), என்பவர் டிக்கெட் எடுக்கவில்லை. இதனால் பஸ்சில் கண்டக்டராக இருந்த ஒசட்டியை சேர்ந்த ராஜி (45) மற்றும் கிளீனராக இருந்த கூத்தனப்பள்ளியை சேர்ந்த நாகராஜ் (18) என்பவரும் தட்டி கேட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாதேஷ், அன்னியாளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தனது நண்பர்களுடன் சேர்ந்து டிரைவர் சுப்பிரமணி மற்றும் கண்டக்டர், கிளீனர் ஆகியோரை தாக்கினர். இதில் காயமடைந்த 3 பேரும் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசில் டிரைவர் சுப்பிரமணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேைஷ நேற்று முன்தினம் கைது செய்தனர்.


Next Story