திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது


திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது
x

வெள்ளகோவில் பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

வெள்ளகோவில் பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பணம் பறிக்க முயற்சி

வெள்ளகோவில் கே.பி.சி. நகரைச் சேர்ந்தவர் பர்வாஸ் ரகுமான்(வயது 27). இவர் நேற்று காலை வெள்ளகோவிலில் முத்தூர் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 3 பேர் வந்து அவரை வழிமறித்து மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை தரும்படி கேட்டு மிரட்டினார்கள்.

அப்ேபாது அந்த வழியாக 2 பேர் வந்ததை பார்த்ததும் அந்த 3 பேரும் செல்போன் பேசுவது போல் நகர்ந்து சென்றுவிட்டனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசில் பர்வாஸ்ரகுமான் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் வெள்ளகோவில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள்

அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்த போது அதில் ஒருவர் தாராபுரம் அருகே உள்ள காங்கயம்பாளையம், மதன் என்கிற செல்வகுமார்( 35) என்பதும் இவர் மீது கரூர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, திருப்பூர், ஊதியூர், ஊத்துக்குளி ஆகிய பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் 23 திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

மற்றொருவர் திண்டுக்கல் மாவட்டம், பழனி கள்ளுத்துறையைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் விஜயகுமார் (27) என்பதும் இவர் மீது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 8 திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த கவியரசு (22) என்பதும், இவர் மீது கரூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 3 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

3 பேர் கைது

இதைதொடர்ந்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் 3 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்கள் 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story