வீட்டில் மான் கறி வைத்திருந்த அ.தி.மு.க. பிரமுகர் கைது


வீட்டில் மான் கறி வைத்திருந்த அ.தி.மு.க. பிரமுகர் கைது
x

வீட்டில் மான் கறி வைத்திருந்த அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்

வீட்டில் மான் கறி வைத்திருந்த அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

மான் கறி

திருப்பூர் மாவட்டம், உடுமலை- திருமூர்த்திமலை சாலையில் உள்ள நீச்சல்குளம் அருகே சாலையை கடக்க முயன்ற மான் ஒன்று வாகனத்தில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் கிடந்த மானை அந்த வழியாக சென்ற திருமூர்த்திநகரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான செந்தில்ராஜ் தனது வீட்டிற்கு எடுத்து வந்து சமைப்பதற்காக பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரகசிய தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அ.தி.மு.க.பிரமுகர் கைது

அப்போது செந்தில்ராஜ் வீட்டில் மான் கறி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


Related Tags :
Next Story