20 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி டிரைவர் கைது


20 டன் ரேஷன் அரிசி  கடத்தி வந்த லாரி  டிரைவர் கைது
x

லாரியில் 20 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த டிரைவர் கைது

திருப்பூர்


திருப்பூர் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, இசக்கி, காவலர்கள் ரமேஷ், சிவக்குமார், மற்றொரு ரமேஷ், பத்மநாபன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் வெள்ளகோவில் அருகே ஓலப்பாளையம் சந்திப்பு பகுதியில் நின்று நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. லாரி டிரைவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ்குமார் (31) என்பது தெரியவந்தது. லாரியில் 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

மேலும் விசாரணையில், கும்பகோணத்தை சேர்ந்த வினோத் என்பவர் கும்பகோணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி பின்னர் அதை கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். லாரியுடன் 20 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்கள்.


Related Tags :
Next Story