மது விற்ற 15 பேர் கைது
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மது விற்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர்
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மது விற்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரோந்து பணி
தஞ்சை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அந்தந்த சரகங்களில் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். இதில் தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
அதில் 5 இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மது விற்ற 5 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் கும்பகோணம், பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அந்தந்த சரக பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
அதில் 10 இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 10 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.