மின்கம்பி திருடிய 3 பெண்கள் கைது
மின்கம்பி திருடிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை
திருப்பத்தூர்,
திருச்சியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி அய்யம்மாள் (வயது 50), வீராச்சாமி மனைவி கலா (45), செல்வராஜ் மனைவி குப்பம்மாள் (37). இவர்கள் 3 பேரும் பகலில் திருப்பத்தூர் நகர் முழுவதும் பழைய சாமான்களை பொறுக்குவது போல் திரிந்துள்ளனர். அப்போது சிவகங்கை ரோட்டில் உள்ள மின்சார வாரியத்தை நோட்டமிட்ட இவர்கள் மாலை 6 மணிக்கு மேல் அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் பின்புறமாக உள்ளே நுழைந்து ரூ.50 ஆயிரம் மதிக்கத்தக்க 150 கிலோ மதிக்கத்தக்க அலுமினிய மின்கம்பிகளை திருடி கொண்டு செல்லும் போது மின் ஊழியர்களிடம் சிக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்தார்.
Related Tags :
Next Story