ஸ்கூட்டர் திருடியவர் கைது


ஸ்கூட்டர் திருடியவர் கைது
x

ஸ்கூட்டர் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

இளம்பிள்ளை:

மகுடஞ்சாவடி அருகே கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் தில்லைகரசன். இவர் நேற்று மதியம் தனது ஸ்கூட்டரை மகுடஞ்சாவடியில் உள்ள ஒரு ஓட்டல் முன் நிறுத்திவிட்டு சாப்பிட்டார். சாப்பிட்டு விட்டு வந்த போது ஸ்கூட்டரை காணவில்லை. ஒருவர் திருடி செல்வது தெரிய வந்தது. உடனே அந்த நபரை தில்லைகரசன் துரத்தி சென்று பிடித்தார். அந்த நபரை மகுடஞ்சாவடி போலீசில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, ஸ்கூட்டரை திருடி சென்றது தாதகாப்பட்டியை சேர்ந்த ராஜா என்ற ராஜ்குமார் (28) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.


Next Story