இரும்பு பொருட்கள் திருடிய 2 பேர் சிக்கினர்


இரும்பு பொருட்கள் திருடிய 2 பேர் சிக்கினர்
x

இரும்பு பொருட்கள் திருடிய 2 பேர் சிக்கினர்.

சேலம்

அன்னதானப்பட்டி:

சேலம் அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவர். இரும்பு பொருட்கள் பட்டறை நடத்தி வருகிறார். இவா் வேலை முடிந்து பட்டறையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை வழக்கம் போல வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த இரும்பு தளவாடப்பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரிந்தது. நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் நோட்டமிட்டு உள்ளே புகுந்து பொருட்களை திருடிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இரும்பு பொருட்கள் திருடியதாக, கந்தம்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (30), மணிகண்டன் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பொருட்கள் மீட்கப்பட்டன.


Next Story