அம்மன் சிலையில் இருந்து நகையை திருடிய வாலிபர் கைது
தாராபுரம் அருகே அம்மன் சிலையில் இருந்து நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம் அருகே அம்மன் சிலையில் இருந்து நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவிலில் நகை திருட்டு
தாராபுரத்தை அடுத்த ஆச்சியூர்புதூர் பகுதியில் உச்சி மாகாளியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் வேலுச்சாமி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். கடந்த13-ந் தேதி மாலையில் கோவிலில் பூஜை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டிற்கு பூசாரி சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கோவில் கதவு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது மாகாளியம்மன் சிலையில் அணிந்திருந்த இரண்டு பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதனையடுத்து தாராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
வாலிபர் கைது
இந்த நிலையில் நேற்று காலையில் அலங்கியம் சாலையில் சந்தேகம்படும்படி வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தாராபுரம் அருகே உள்ள பெருஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் மணி என்கின்ற கோழி மணி (26) என்பதும், ஆச்சியூர்புதூரில் உள்ள உச்சிமாகாளியம்மன் சாமி கழுத்தில் இருந்த நகையை திருடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.